Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோட்டக் மஹிந்திரா வங்கி புதிய சிஇஓ அனுப் குமார் சாஹா

கோட்டக் மஹிந்திரா வங்கி புதிய சிஇஓ அனுப் குமார் சாஹா
அனுப் குமார் சாஹா

கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனுப் குமார் சாஹாவை நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனுப் குமார் சாஹாவை நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கோட்டக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது கோட்டக் மகிந்திரா வங்கியின் முழுநேர இயக்குநராகப் பொறுப்பு வகித்து வரும் அனுப் குமார் சாஹா, சில்லறை வங்கிச் சேவை, தரவு பகுப்பாய்வு மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளை கவனித்து வருகிறார். கடந்த 2026 மார்ச் முதல் இந்தப் பொறுப்புகளை அவர் கவனித்து வருகிறார். தற்போது வங்கியின் எம்.டி., சி.இ.ஓ.வாக உள்ள அசோக் வாஸ்வானிக்குப் பிறகு, அனுப் குமார் சாஹா அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

நியமனத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற வங்கியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நியமனம் வரும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 32 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட அனுப் குமார் சாஹா, வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதிச் சேவைத் துறையில் மட்டும் 25 ஆண்டுகளுக்கும் அனுபவம் கொண்டவர்.

முந்தைய செய்தி
Train services revised for track maintenance
அடுத்த செய்தி
India demonstrates first 5.56-km free-space QKD

தொடர்புடைய செய்திகள்